பிளஸ் 2 முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 28 January 2018

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்பிரிவு உட்பட) வயது வரம்பு இல்லை.எழுத்துத் தேர்வு மே 6 நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot