டி.என்.பி.எஸ்.சி நடத்திய பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2014 முதல் முறைகேடு செய்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் குறித்து அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது.
முறைகேடு குறித்து தலைமை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி இயக்குனர் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அரசு பலரை சேர்த்து இருப்பதாக வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
பத்திரிகை செய்தி அடிப்படையில் ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 250 பேர் வரை முறைகேடு செய்து அரசு பணியில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேடு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றி பிப்ரவரி 16ம் தேதிக்குள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளில் பணம் கொடுத்து பதவி பெறுபவர்கள் எப்படி நேர்மையாக பணி புரிவார்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.