தமிழகத்தில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான,'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.
இதற் காக, 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது. மொத்தம், இரண்டு லட்சம் இடங்கள் உள்ளன. இதுவரை, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த,ஒற்றை சாளர கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான, ஆன்லைன்விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. வரும், 30ம் தேதி வரை, ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ளலாம். தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், மாநிலம் முழுவதும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை இந்த மையங்கள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தே, கணினியில், ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம்.அண்ணா பல்கலையின், tnea.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவை மேற்கொள்ள வேண்டும். கவுன்சிலிங்குக்கான விதிகள், தேவைப்படும் சான்றிதழ்கள், மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீட்டு முறைஉள்ளிட்ட விபரங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
உதவி மையங்கள் எங்கே?
* ராமானுஜம் கணினி மையம், அண்ணா பல்கலை, சென்னை
* எம்.ஐ.டி., கல்லுாரி, குரோம்பேட்டை
* அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, காஞ்சிபுரம்
* முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி, ஆவடி
* அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, காகுப்பம், விழுப்புரம்
*அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, மேல்பாக்கம், திண்டிவனம்
* அண்ணா பல்கலை மண்டல அலுவலகம், கீழக்குயில்குடி, மதுரை
* தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, திருப்பரங்குன்றம்
* வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, ரோசல்பட்டி, விருதுநகர்
* அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, மாங்கரை பிரிவு, திண்டுக்கல்
* அரசு இன்ஜி., கல்லுாரி, போடி நாயக்கனுார்
* அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, புல்லங்குடி, ராமநாதபுரம்
* ஏ.சி.இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, காரைக்குடி
* அண்ணா பல்கலை மண்டல அலுவலகம், நவவூர், கோவை
* கோவை தொழில்நுட்ப கல்லுாரி, அவினாசி சாலை, கோவை
* அரசு கலை கல்லுாரி, ஊட்டி
* சிக்கண்ணா அரசுகலை கல்லுாரி, கொங்கனகிரி, திருப்பூர்
* அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி, பணிக்கன் குப்பம், பண்ருட்டி
* அண்ணாமலை பல்கலை இன்ஜி., கல்லுாரி, சிதம்பரம்