''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வரும், 31ம் தேதி வரையிலான, கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நேற்று துவங்கின. இதை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:தமிழகத்தில், அரசு பள்ளிகளை சேர்ந்த, 3,145 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்பது தனியார் கல்லுாரிகளில், உணவு, உறைவிடத்துடன் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, அரசின் கட்டண நிர்ணய கமிட்டி வழியாக, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டண விபரத்தை, பள்ளிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். கமிட்டி நிர்ணயித்ததைவிட, அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. அதிக கட்டண வசூல் குறித்து, புகார் அளித்தால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.