பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் வைத்து வெளியிடும் நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறைஅறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியாக உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்தாண்டு முதல் தேர்வுமுடிவுகள் பள்ளிக்கல்வி இயக்க கத்தில் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத்தேர்வுகள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவிலாளர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல் மாணவர்கள் இணையதளம், எஸ்எம்எஸ் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 10ம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.