TNPSC - என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்துதேர்வு 20-ந்தேதி நடக்கிறது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday, 12 May 2018

TNPSC - என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்துதேர்வு 20-ந்தேதி நடக்கிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 28.2.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 330 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 20-ந்தேதி சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் ஓ.எம்.ஆர். தேர்வு முறையில்நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுக்கு 68 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதென்றால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot