புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 4) வெளியிடுவார்.
இந்தப் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சிகள் வரும் ஜூன் 1 முதல்ஜூன் 15 வரை நடைபெறும்.தமிழகப் பள்ளிகளில் மாணவர்- ஆசிரியர் விகிதம் குறித்து கணக்கிட்டு வருகிறோம். இதையடுத்து எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர் என கணக்கெடுத்து அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று சிறப்பு ஆசிரியர்களுக்கான தேவை குறித்த விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அடுத்த 15 நாள்களுக்குள் இது தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு ஜூன் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.