கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 3 May 2018

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உரிம சான்றை ஆண்டு தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கோடை விடுமுறையில் எக்காரணத்தை கொண்டும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். சுகாதார சான்று, தீத்தடுப்பு சான்று உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர் கல்வித்தகுதி இல்லாத நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது.

 பி.எட். உள்ளிட்ட ஆசிரியர் கல்வித்தகுதி உள்ள நபர்களை மட்டுமே ஆசிரியர் பணியில் ஈடுபடுத்த வேண்டும். பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பள்ளி கல்வித்துறை மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசு விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நிகழ்ச்சி சேலம் அம்மாபேட்டை ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஒப்புதல் வழங்கினர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot