புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1,6,9,11 ஆம் வகுப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மேலும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இந்த புத்தகங்கள் முதல்வர் கையால் வெளியிட தயாராக பள்ளிக் கல்வித்துறை இருந்தது. ஆனால், அவசர பணி காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 1ம் தேதியே டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் 2ம் தேதி வெளியிட இருந்த புதிய புத்தகங்கள் இன்று வெளியிடப்பட்டது. இதற்கிடையே, புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை பின்பற்றி தனியார் பதிப்பகம் ஒன்று அனைத்து பாடங்களுக்கும் ‘‘ கைடு’’ தயாரித்து வெளியிட்டுள்ளது. நேற்று அந்த கைடுகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன.