கல்வித்துறை அலுவலர்கள் நிர்வாகமாற்றத்தில் குழப்பம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 31 May 2018

கல்வித்துறை அலுவலர்கள் நிர்வாகமாற்றத்தில் குழப்பம்

தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் இன்றுமுதல் (ஜூன் 1) செயல்படவுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி அலுவலக பணியிடங்களுக்கான உத்தரவு வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொடக்க, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு கீழ் இயங்கிய பள்ளிகள், அலுவலகங்கள் கல்வி இயக்குனரின் கீழ் செயல்படும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளும் முதன்மை கல்வி (சி.இ.ஓ.,) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) கட்டுப்பாட்டில் வருகின்றன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டு டி.இ.ஓ.,க்களாக மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் பிரிக்கப்பட்ட கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் அதற்கானஉத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்கவில்லை.இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலக பணியிடங்கள் நிர்ணயத்திற்கு உத்தரவு வராததால், முழு அளவில் சீரமைக்கப்பட்ட நிர்வாகம் இன்று முதல்செயல்படுவதில் சிக்கல் நீடிக்கும்.

மெட்ரிக், தொடக்க கல்வி அலுவலகங்களில் ஏற்கனவே பணியில் இருந்த கண்காணிப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான பணியிடம், தற்போது இவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் இருந்தும் பணியாற்ற முடியாத மனவேதனையில் உள்ளனர், என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot