கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 31 May 2018

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசுப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடந்தன.
இதையடுத்து மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்தன.மே மாதம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்ச வெயில் 104 டிகிரி வரை இருந்தது. இதனால் பள்ளிகள் திறப்பதை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்ப தற்கு  முன்னேற்பாடாகஅனைத்து பள்ளிகளிலும் தூய்மை செய்வது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது, கழிப்பிடங்களை சீர்செய்வது, போன்ற அத்தியாவசிய பணிகளை செய்து முடிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு வழங்கும் 14 வகை இலவசங்களில் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப் பை ஆகியவை நாளை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1, 6, 9,ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள புத்தகங்கள் வழங்கப்படும். அவற்றுடன் புத்தகப் பை, நோட்டுகளும் வழங்கப்படும். சீருடையை பொறுத்தவரையில் 1 முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு வரை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு சில வகுப்புகளுக்கு மட்டும் சீருடைகளின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரோஸ் நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வெளிர்நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகளை நடத்துவோர் சிலமாவட்டங்களில் 4ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவுசெய்துள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot