நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்காமல் வெளிமாநிலங்களில் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எதை கொண்டு வரலாம், எதை கொண்டு வரக் கூடாது என்பது குறித்து விதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
நாளை காலை 10 நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
துண்டு பேப்பர்கள், பென்சில் பாக்ஸ், பர்ஸ், பேனா, ஸ்கேல், எழுதும் அட்டை, ரப்பர்கள், லாக் புத்தகம் (Log book), ஸ்கேனர்கள் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.
கால்குலேட்டர், பென்டிரைவ், செல்போன், ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர் ஆகியவற்றுக்கு தடை.
கைக்கடிகாரம், பிரேஸ்லெட், வாலட், கண்ணாடிகள், கைப்பை, ஹேண்ட்பேக், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, செயின், பேட்ஜ் ஆகியவற்றை அணியக் கூடாது.
ஹீல்ஸ் செருப்புகள், ஷூக்கள் அணியக் கூடாது.
உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டிலுக்கும் அனுமதியில்லை.
அரைக்கை கொண்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். முழுக்கை கொண்ட ஆடை (ஃபுல் ஸ்லீவ் சர்ட்) அணிய தடை. அதுபோல் அணியும் ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் இருக்கக் கூடாது.
கலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.
இந்த விதிகளை பின்பற்றாமல் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.