குரூப் 4 பதவிகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 9ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணிகளுக்கான 5,451 காலியிடங்களுக்கு குரூப் 4 (2015-16)தேர்வுகள், 2016 நவம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வை 5,296 மையங்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் 2017 பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், இளநிலை உதவியாளர் பதவிக்கான 6 காலிப் பணியிடங்கள் மற்றும் தட்டச்சர் பதவிக்கான 2 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மே 9ஆம் தேதி நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினிவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே,சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதால் அவர் அப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
அதேபோல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.மேலும், விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.