அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 12 June 2018

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:
இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.

எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங் கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot