சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 21 November 2018

சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா?


சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான தற்காலிக இறுதி தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கீடு (Reserved) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடந்த குழந்தைகள் தினவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேறு மாநிலங்களில் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தையல், ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் பயின்ற தேர்வர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:-
டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று அந்தத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.
விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மட்டும் ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்கீழ் தேர்வானோர் சான்றிதழை சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளனர்.


இதே நடைமுறை ஓவியம், தையல் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏன் பின்பற்றப்படவில்லை? உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை? சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன.
எங்களுக்கும் இதுபோன்று கால அவகாசம் அளித்திருந்தால், தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க இயலாது என்று சொல்லி அரசு தேர்வுத்துறை அளித்த சான்றிதழையோ அல்லது ஏதேனும் தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தவர்கள் அங்கிருந்து பெறப்பட்ட சான்றிதழையோ அல்லது சுயமாக படித்தவர்கள் அதற்கு சுயஉறுதிமொழி சான்றிதழையோ சமர்ப்பித்திருப்போம்.
எனவே, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் போல் எங்களுக்கும் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்

2 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள் ஊடகங்கள் வாயிலாகவும் பல்வேறுவிதமான மனுக்கள் மூலமாகவும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் தொலைக்காட்சி செய்தியிலும் தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக உள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காமல் இதுவரை தட்டிக் கழித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களாலும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினைக்கு உரிய தகுதி வாய்ந்த அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று பட்டியலில் இடம் பெற வாய்ப்பு அளிக்கப்படவேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கடமை.மேலும் வருடக்கணக்கில் காலம் தாழ்த்தி வருவது மிகவும் மோசமான நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இருந்து வருகிறது.என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  2. பணத்திற்காக தேர்வில் எந்த தகுதியும் பரவாயில்லை. என்று வசூல் செய்து விட்டு. இப்போது பல குளறுபடிகள்.ஒரு தேர்வை நடத்த அதன் வழிமுறைகளை நன்றாக அறிந்த சிறந்த வழிகாட்டி தேவை .நமக்கு ஆனால் இங்கு இப்போதுவரை நடக்கும் குழப்பங்களை பார்க்கும் போது இதில் செயல்படும் வழிகாட்டிகள் அதன் முன்னோடிகள் போல் தெரியவில்லை. தயவு செய்து போலி சான்றிதழ் கொண்டு பணி செய்யும் மூதேவிகள் .நாய்கள் . போலி ஆசாமிகள் .நீங்களே வெளியே வந்து விடுங்கள்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot