TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 30 November 2018

TNTET லிருந்து விலக்கு: Minorities / Non-minorities பாகுபாடுகள் நீக்க கோரிக்கை


TNTET லிருந்து சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு அளித்தது போல, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் TNTET லிருந்து முழுவதும் விலக்கு அறிவிப்பு அரசாணை விரைந்து வெளிவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக TNTET நிபந்தனையுடன் பணி புரியும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு  TET  REFRESHMENT COURSE நடத்தப்பட்டு வருகிறது. இது TET தேர்ச்சிக்கு சமமாக ஏற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இந்த சிக்கலுக்கு நான்கு மாதத்தில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இது சம்மந்தமாக 16/11/2012 க்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் TNTET முழு விலக்கு அரசாணைக்கு காத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.


ஆகவே
பாரபட்சம் காட்டாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என TNTET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகிறது.


4 comments:

  1. தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிபயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்செநதுறை ரோடுஅரியலூர்.தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியோடு பலர் வேலையில்லாமல் இருக்க, சிறபானமையினர், உதவிபெறும் பள்ளிகள் என்ற காரணத்தினாலேயே தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் எப்படி? மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்தால் நமக்கென்ன?

    ReplyDelete
  3. தினமலர் நாளிதழ்கூட பாரபடசமாக செய்தி வெளியிட்டுள்ளது. அவங்களுக்கு சர்க்குலேஷன் அதிகமாகனும். யார் எப்படி போனால் எனக்கென்ன? என்கிற மமதைதான்!

    ReplyDelete
  4. அட்மின் அவர்களும் கல்விக்காக பாடுபடுவதாக மார்தட்டிக் கொண்டு இவர்களுக்காக குரல் கொடுக்கிறார்களேயொழிய வேளையில்லா, வெய்ட்டேஜ்- ஆல் பாதிக்கப்பட்ட என் மாதிரியான ஆசிரியர்களின் இருட்டிக்கப்பட்ட எதிர்காலத்தை மீட்டெடுக்க ஒரு வார்த்தையாவது செய்தியாக வெளியிட்டதுண்டா? அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு எங்களின் கண்ணீர்,கண்ணுக்குத் தெரியாது-ஆனால் அரசுப்பணியிலுள்ள தகுதியில்லா ஆசிரியர்களுக்கு தாலாட்டு பாடுகிறார் . உலகமே பணம் இருக்கும் பக்கம்தானே .எங்கள் தலைவிதி. ம்ம்...

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot