2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 11 December 2018

2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு!



2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கை, இடைக்கால உத்தரவிற்காக  நாளைக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற வேண்டும். இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடந்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில்  இடமாறுதல் நடைபெறும். தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள்,  வடமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட மாட்டார்கள். ஆனால், இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர் பொது இடமாறுதலில், விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும். இதனால் பிற மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வெறும் 5 மாதங்கள் பிற மாவட்டங்களில்  பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

பதவிஉயர்வையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர். வெளிப்படையின்றி, லஞ்ச அடிப்படையில் நடைபெற்றுள்ள இந்த ஆசிரியர் பொது இடமாறுதல், பிற ஆசிரியர்களின் நலன்களை பாதிக்கும் வகையில்உள்ளது. எனவே, லஞ்ச அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் குறித்து புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்.  ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2018-19க்கான ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 11,990 பேர் இந்த கலந்தாய்வில் பங்கெடுத்ததாகவும், விதிப்படி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்காக நாளைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

2 comments:

  1. எந்த சங்கமும் கேட்க துப்பில்லை ஆசிரியர்களுகாக போராடுகிறார்க்ளாம்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot