ஆசிரியர் இடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் பேரம் பேசுவதுபோல, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீடியேட்டரான ஒரு தலைமையாசிரியர், மற்றொரு தலைமையாசிரியருடன் பேசும் ஆடியோ, வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதி பள்ளியைச் சேர்ந்த மீடியேட்டரான ஒரு தலைமையாசிரியரும், திருச்செந்தூர் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரும் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இருவரும் பேசிய உரையாடல் வருமாறு:
‘நான் ராமசுப்ரமணியன் பேசுறேன்...’
‘அந்த கெமிஸ்ட்ரியை அனுப்பி விட சொல்லுங்க. அடிசனல் போஸ்டிங் நாளைக்கே போடுறாங்க...’.
‘எவ்வளவாம்’.
‘ஏழு ரூபா (7 லட்சம்) சொல்லுறாங்க’.
‘நேற்று அந்த ஆளு ஸ்கூலுக்கு வந்தார். ஆறரை ரூபாய்க்கு வரமாட்டாங்களா? வேலை இல்லாமல் அந்தாளு இருக்காரு. அதேன் அவரு சொன்னாரு’.
‘என்னன்னு கேட்டு நாளைக்கு காலை 10 மணிக்குள்ளே சொல்லுங்க’.
‘எவ்வளவு சொல்றாங்க? ஏழரையா?’.
‘ஏழுதான்’
‘திருநெல்வேலி பி.டி கிரேடு 7, விருதுநகருக்கு 6 பி.டி போஸ்டிங், பி.டி பட்டதாரி 6 ரூபாய். ‘அண்ணே நாம போறது ஒரு ஐஏஎஸ் மூலமா போயிக்கிட்டு இருக்கோம். நாம சொன்னா கரெக்டா இருக்கும். யாரும் உருவ முடியாது. மற்றபடி உருவிடுவாங்க’
‘ஆபிஸ் வழியா? அரசியலா?.. ஆபிஸ் வழியாவா போகுது’.
‘ஆபிஸ் வழியா தான், ஒரு ஐஏஎஸ் மூலமா போகுது. அந்த ஆளு வாங்கி கொடுக்கிறாரு.. செக்ரட்டேரியட்ல சொல்லும்போது அவங்க போட்டுத்தான் ஆவாங்க’.
‘போன வருசம் ஆறரைக்கு கெமிஸ்டிரி வாங்கி கொடுத்தேன். செங்கோட்டையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு வாங்கி கொடுத்தேன்’.
‘நாளைக்கு ஸ்கூலுக்கு போன உடன் அந்த அம்மாக்கிட்டே கேட்கிறேன் உங்கக்கிட்ட வாங்கி கொடுத்து அந்த அம்மாவை நம்பி அசிங்கப்படக்கூடாதே’.
‘நீங்க சொன்ன உடன் நானும்... நாளைக்கு சென்னைக்கு அந்த ஆளு போகுது’.இவ்வாறு அந்த உரையாடல் இடம் பெற்றிருந்தது. ஆசிரியப்பணியில் இடமாறுதலுக்கு பெரும் தொகையை அதிகாரிகள், அரசியல்வாதிகள் லஞ்சமாக பறித்து வரும் நிலைக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Worst scenario
ReplyDeletebad
ReplyDeleteWho creates
ReplyDeleteFrom whose phone tapped
Any proof
Don't make these type of posts
Complain authentically
Then only we can stop it
Otherwise it is an advt to them
It must be. Because some of them asking me also 7 lakh for tudi
DeletePg posting ku 18lakhs kekuranga
ReplyDeleteRTI Uடி ஒவ்வொரு மாவட்டத்திலும் கேட்டுப் பார்
ReplyDeleteஎவ்வளவு நிர்வாக டிரான்ஸ்ப்ரான தெரியும். இந்த திருட்டு பசங்க
அரசியல் ஊழல் வாழ்வாதரத்தை பாதிக்கிறது
ReplyDelete