நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 20 December 2018

நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்'



அனுமதி இன்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரி யர்களையும், நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும், பணி நீக்கம் செய்ய, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் சிலர், உரியஅனுமதியின்றி, நீண்ட கால விடுப்பு எடுத்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் பணியில் சேர்கின்றனர்.நீண்ட விடுப்பில் இருக்கும் சிலர், திடீரென இறந்து விடுகின்றனர்.அவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் கேட்டு, அரசிடம் விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், அரசு வேலையே செய்யாமல், ஒழுங்கீனமாக நடந்தவர்களுக்கு, எதற்கு நிதியுதவி என, நிதித்துறையில் கேள்வி எழுப்பப்படுகிறது.'சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு, உரிய காலத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது' என்றும், நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வி செயலகம், அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

அனுமதியின்றி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒழுங்கீன அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மீது, காலதாமதம் இன்றி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், வேலையேசெய்யாதவர்களுக்கு, அரசின் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே, வேலைக்கு வராதவர்கள் மீது, பணி நீக்கம் உள்ளிட்ட, ஒழுங்குநடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதல்லாம் துஷ்பிரயோகம் செய்றவங்களுக்கு பொருந்தாது, ஒழுக்கமா வேலை பாத்துட்டு நீண்ட நாள் விடுப்பு கேக்குறவனுக்கு மட்டும் தான் பொருந்தும், வாரா வாரம் சரியா விடுமுறை எடுக்குறவன் எல்லாம் நல்லவன், ஒருநாள் கூட எடுக்காம மொத்தமா வேலை இல்லாதப்ப விடுமுறை கேக்குறவன் கெட்டவன்....

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot