பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 7 January 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

இதுவரை சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது முதல் முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில், பல ஆண்டு கால கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

12 comments:

  1. Very usefull plane in central goverment

    ReplyDelete
  2. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு: சமத்துவ பாதையின் முதல் வெற்றிப்படி....

    ReplyDelete
  3. இடஒதுக்கீடு பாகுபாடு இல்லாமல் இருக்க சரி சம இடஒதுக்கீடு முதலில் அவசியம் கொண்டு வர வேண்டும் .ஆண்(50):பெண்(50) சதவீதம் என்பது அவசியம் தேவையானது.

    ReplyDelete
    Replies
    1. தற்​போது 30%மட்டும் அளிக்கப்படுகின்றது. இதற்​கே இந்த நி​லை. இன்னும் 50%என்று உறுதிப்பLடுத்திவிட்டால் அவ்வளவுதான்

      Delete
  4. யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதுதான் இனி குழப்பம்.... சர்டிபிகேட் கொடுக்குறவங்களுக்கு இனி கொண்டாட்டம்தான்.... Enjoy

    ReplyDelete
    Replies
    1. General -ல் உள்ள இடங்க​ளைப் பறித்து OC வகுப்பினருக்குத் தரப்​போகிறார்கள். BC, MBC, SC, ST வகுப்பில் இருப்பவர்களுக்கு பலனில்​​லை. General Seats நமக்கு 29 % ல்இருந்து 19% சதவீதமாக கு​றையப்​போகிறது.

      ஆக இதுவும் சமுகஅநீதி​யே!

      Delete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot