ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 10 January 2019

ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு?

அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு?

அகவிலைப் படி என்பது விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில் சில கணக்கீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

 2018 டிசம்பர் மாதம் வரை விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தான், AICPIN யின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதன் படி அகவிலை உயர்வுக்கான சதவீதம் பற்றி, மத்திய அரசின் நிதித்துறை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பும்.

 இதனை மத்திய அரசின் அமைச்சரவை (கேபினட்) ஆய்வு செய்து, அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கும். இதன் பிறகு மத்திய அரசு முறைப்படி அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும். இது பெரும்பாலும் மார்ச் முதல் வாரம் தான் அறிவிக்கப்படும்.

 இதன் பிறகு, மத்திய அரசு முறையாக அரசாணை பிறப்பிக்கும். இந்த அரசாணையைப் பின்பற்றி தான் மாநில அரசுகள், தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மற்றும் இதற்கான அரசாணையை பிறப்பிக்க இயலும்.

இது பெரும்பாலும் மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் முதல் வாரம் தான் அறிவிக்கப்படும். ஆகவே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை பிறப்பிக்காமல், மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க இயலாது. *தற்போதைய கணக்கீடுகளின் அடிப்படையில், 2019 ஜனவரி முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதாவது அகவிலைப்படி 9% லிருந்து 12% அல்லது 13% ஆக உயர்த்தக் கூடும்.* இதுவும் மார்ச் முதல் வாரத்தில் தான் அறிவிக்கப் படும். 2019 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை, அடுத்த நிதியாண்டு 2019-20 அதாவது 2019 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தான் பெற முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot