ஆசிரியர்கள் பணியில் சேர மறுப்பதால்மாற்று ஏற்பாடு; 2,381 மையங்களில் மழலையர் வகுப்புகள்: முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 20 January 2019

ஆசிரியர்கள் பணியில் சேர மறுப்பதால்மாற்று ஏற்பாடு; 2,381 மையங்களில் மழலையர் வகுப்புகள்: முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் இன்று தொடங்கப்பட உள்ளன. அங்கு பணியில் சேர ஆசிரியர்கள் மறுப்பதால் மாற்று நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் மான்டிசோரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி முதல்கட்டமாக 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளன. இதற்கான இறுதிகட்டபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை தயார் நிலையில் உள்ளன. மழலையர் பள்ளிகளுக்கு வகுப்புகள் காலை 9.30 முதல் மதியம் 4 மணி வரை நடைபெறும்.

மதியம் 12.10 முதல் 1 வரை மதிய உணவு நேரம் வழங்கப்படும். பகல் 1 முதல்3 மணி வரை துாங்க வைத்து பின் ஒரு மணி நேரம்பாடம் நடத்தி மாலை 4 மணிக்கு வகுப்புகள் முடிக்கப்படும்.இந்த குழந்தைகளுக்கு 4 செட் சீருடை, காலணி, ஒரு ஸ்வெட்டர், ரெயின்கோட், கலர் பென்சில், பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் 2 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதற்கிடையே மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்படுகின்றனர்.

இதை எதிர்த்து பெரும்பாலான ஆசிரியர்கள் பணி மாறுதல் உத்தரவை மறுத்து விடுப்பில் சென்றுவிட்டனர். இதை சமாளிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்தனர். இதுதவிரஇடைநிலை ஆசிரியர்களில் இளையவரை தற்காலிகமாக மாற்றும் முயற்சியில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பணி மாறுதலை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. தீர்ப்பு கிடைக்கும் வரை பணியில் சேரமாட்டோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot