ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க அரசு உத்தரவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 20 January 2019

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க அரசு உத்தரவு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிகள் இணைப்பை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, தமிழகம் முழுவதும் நாளை (22-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.இந்நிலையில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.


அதன்படி, வேலைநிறுத்த நாட்களில் மாவட்ட வாரியாக பணிக்கு வராத ஆசியர்களின் பட்டியலை முதன்மைக் கல்வி அதிகாரிகள் தயாரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டக் குழுவை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதல்வர் பழனிசாமிஅழைத்துப் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இல்லையெனில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் அருணன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Salary fixation correct a lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum kanyakumari District vacancy display pannala transfer order kodukkiranga 8 lac lancham vangi transfer order kodukkiranga 8 lac lancham vangi transfer order kodukkiranga lancham oooolal olikkapadavendum kanyakumari District vacancy display pannala transfer order kodukkiranga 8 lac lancham vangi transfer order kodukkiranga lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot