போராட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 27 January 2019

போராட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை

போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குஆதரவாக மேலும் சில சங்கங்களும் இன்று முதல்வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவரும் அரசு, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண் பாடுகளை சரிசெய்வது, 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலு வையை வழங்குவது என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரி யர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி தொடங்கி, காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முதல் நாளன்று ஆர்ப்பாட்டமும் அடுத்தடுத்த நாட்களில் மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவ, மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. அன்றாடப் பணிகள் நடக்காமல் அரசு அலுவலகங்களும் முடங்கியுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் கள் உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. அரசு பள்ளி ஆசிரியர்கள் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண் டும் என்று ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது. ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் கடந்த 25-ம் தேதி மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப் பட்டனர். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சுமார் 500 பேர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 422 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்துக்கு இடையிலும், ஆசிரியர்கள் அனைவரும் குடியரசு தினத்தன்று பள்ளிக்குச் சென்று விழாவில் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் 28-ம் தேதி (இன்று) பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. அதே நேரம், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்அறிவித்துள்ளது. போராட் டத்தில் ஈடுபட்டுள்ள 1 லட்சம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டு வருகிறது.இதற்கிடையே, அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்று தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பர சன், சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

கடந்த 22-ம் தேதி முதல் 8 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தச் சூழலில், அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவல்களை கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் அரசியல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார். நாங்கள் அரசியல் செய்ய ஆரம்பித்தால், தமிழகத்தில் எந்த ஆட்சியும் நிலையாக நடைபெறாது.நிதிப் பற்றாக்குறை இருப்பதாக கூறும் அரசு, எம்எல்ஏக்கள் சம்பளத்தை எந்த அடிப்படையில் 110 சதவீதம் உயர்த்தியது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பள உயர்வு, பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பாரபட்சமாக நடப்பது ஏற்புடையது அல்ல. மாநில அரசின் நிதிநிலையை சரிசெய்ய, ஊழியர்கள் திறம்பட பணியாற்ற தயாராக உள்ளோம்.அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரி களின் நிர்வாக செலவுகளை அரசு ஊழியர் சம்பளக் கணக்கில் சேர்ப்பது ஏற்க முடியாது. எங்களுக்கு எதிராக மக்களை மடைமாற்ற அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜனநாயக ரீதியாக போராடி வருகிறோம். ஆனால், பொய் வழக்குகளில் கைது, பணி இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளால் போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பது கண் டிக்கத்தக்கது. போராட்டம் நடத் துவது எங்கள் நோக்கம் அல்ல. பேச்சுவார்த்தை மூலம்பிரச்சி னைக்கு சுமுகத் தீர்வு காணவே விரும்புகிறோம். தற்காலிக ஆசிரி யர்களை நியமித்து, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடி யாது. எனவே, முதல்வர் பழனிசாமி எங்களை அழைத்துப் பேசி தீர்வு காணமுன்வர வேண்டும். இல்லா விட்டால் போராட்டம்மேலும் தீவிர மடைவதை யாராலும் தடுக்க முடி யாது. எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக உள்ளோம். திட்ட மிட்டபடி, மாவட்டத் தலைநகரங்க ளில் 28-ம் தேதி (இன்று) மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக தமிழ்நாடு தலைமைச் செயலகம், தமிழ்நாடு நீதித்துறை பணியாளர் சங்கம், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர், மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின் றனர். இன்று நடக்கும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரி யர்இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் தெரிவித் துள்ளார்.போராட்டம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற உத்தரவை பார்த்துவிட்டு, மதுரையில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க உள்ளனர்.தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக் கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பிஎட் பட்டதாரி கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை கேட்டு கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் கடந்த 26-ம் தேதி முதல் குவியத்தொடங்கினர். நேற்றும் ஏராளமானோர் விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேவைக்கு ஏற்ப, அவர்களில் தகுதியானவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணி நியமனம் செய்து அதற்கான ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை நேற்று வழங்கியது. அவர் கள் அனைவரும் பணியில் சேர தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot