ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 30 January 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஜாக்டோ -ஜியோ, அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  சென்னை - திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஜன.22-ம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின.

இதையடுத்து தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இதனையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. எனவே நேற்று காலை முதல் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  அறிவித்துள்ளனர். 

6 comments:

  1. போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும்,நேற்று ஓடிச்சென்று கையெழுத்திட்டவர்களுக்கும்,இன்று கையெழுத்திட்டவர்களுக்கும் ஒரு சிறிய பதிவு

    இப்பதிவு........




    நான் PG,BT,SGT ,PET ,HM, ,HIGHER SECONDARY,PRIMARY,MIDDLE AIDED என்றெல்லாம் கூறி , நாங்களெல்லாம் ஆசிரியன் என்ற ஒற்றைப்பாதையில் பயணிக்கத் தவறிவிட்டீர்கள்


    1 முதல் 12 வரை அனைவரையும் தூக்கிவிட்டு தற்காலிக ஆசிரியரை நியமிக்க முடியுமா?

    இதைகூட யோசிக்காத நீங்களெல்லாம் ஆசிரியர்களா?


    தற்காலிக ஆசிரியர் என்ற செத்த பாம்பைக்காட்டி அரசு உங்களை எல்லாம் பயம் காட்டி விட்டது

    சிங்கமும் நான்கு மாடுகளும் கதை தெரியுமா?

    தனியாக போனால் மேய்ச்சல் நன்றாக இருக்கும் என்று ஏமாந்து விட்டது ஆசிரியர் சமுதாயம்

    1ஆம் வகுப்பு மாணவனுக்குத்தெரிந்த
    கதைகூட உங்களுக்கு தெரியவில்லையே

    ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்று மாணவர்களுக்குச் சொல்லித் தந்து சமுதாயமா நீங்கள்

    ஆனால் நம் மாணவன் புரிந்துவைத்துள்ளான். மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டத்தில் நீதிமன்ற தடையை மீறி வெற்றி பெற்றானே!
    அவன் எங்கே உங்கள் சமுதாயம் எங்கே

    புறமுதுகில் காயம்பட்டான் என்றவுடன் போர்க்களம் புகுந்தாள் என்ற பாடம் கற்பித்த ஆசிரியர்களை நீங்கள்

    மாற்றான் தேவையில்லை......



    எஸ்மா,டெஸ்மாவை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய காலத்தில் சந்தித்த உங்கள் முந்தைய ஆசிரியர் சமுதாயம் எங்கே எங்கே நீங்கள் இங்கே


    என்னை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும்,
    எந்த வகுப்பு வேண்டுமானாலும் தரட்டும் ,
    எனக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை,,,,
    எவன் சிறை சென்றாலும் கவலை இல்லை,
    எனக்கு மட்டும் சம்பளம் வந்தால் போதும்
    நான் பாதுகப்போடு இருந்தால் போதும்,
    நான் எந்த போராட்டத்திற்கும் வரமாட்டேன் என்று உறுதிமொழி கையெழுத்திட்டு
    சென்றீர்களே


    சிறை சென்றவர்கள் தங்களுக்காக சிறை சென்றார்கள் உங்களுக்கும்தானே சென்றார்கள்





    ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி வென்றுவிட்டது..........

    இனி ஒற்றுமையே பலம் என்று ஒருபோதும் சொல்லித்தராதீர்கள்.. அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி. தற்காலிக ஆசிரியர் உங்களுக்கு செத்த பாம்பா?

      Delete
  2. Super pathuvu saminathan sir

    ReplyDelete
  3. Nitchayam oru nal latchitam vellum

    ReplyDelete
  4. உங்கள் போராட்டம் நியாயமானது ஆனால் ஏழை மாணவர்கள் மட்டுமே படிக்கும் அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு நெருங்கும்போது செய்தது மிகத்தவறு.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot