பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் - அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல - ஜாக்டோ- ஜியோ! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 26 January 2019

பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் - அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல - ஜாக்டோ- ஜியோ!

5வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமத்தை அரசு கூறும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார். ஓய்வூதிய சுமை அதிகரித்துள்ளதால்தான் புதிய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 174 நாடுகளில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வுதிய திட்டம் அமலில் இருந்தால் அரசு திவாலாகும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். மேலும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம் வழங்க மட்டுமே தமிழக அரசால் செயல்பட முடியாது என அவர் கூறியுள்ளார். தமிழக அரசு ஏற்கனவே 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனில் கடன் வாங்கிதான் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடன் பெற்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமை சுமத்துவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது என அவர் தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் ஊதிய உயர்வு வழங்கியுள்ளதாகவும், நிதி நிலையை உணர்ந்து, மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஜாக்டோ- ஜியோ நிர்வாகி மாயவன் பதில்:

பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் என்று ஜாக்டோ- ஜியோ நிர்வாகி மாயவன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் வாதங்கள் ஏற்புடையதல்ல என்று தெரிவித்த அவர், ஓய்வூதிய நிலுவைத் தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

4 comments:

  1. ஐயா 10000ருபாய் சம்பலத்துக்கு சண்டை போட்டு கொண்டு இருக்காங்க பார்த்து உசார இருங்க ....உங்கள் கூட இருப்பவர்களே உங்களுக்கு தெரியாமல் வீட்டுக்கு போய் விடுவார்கள்......

    ReplyDelete
    Replies
    1. Salary yaru kudduppar kal government la kajanavula panam enga irrukku 7 yrs velai pathavarkalukke 200 rs pitchai போட்டார்கள்

      Delete
    2. Salary yaru kudduppar kal government la kajanavula panam enga irrukku 7 yrs velai pathavarkalukke 200 rs pitchai போட்டார்கள்

      Delete
    3. Salary yaru kudduppar kal government la kajanavula panam enga irrukku 7 yrs velai pathavarkalukke 200 rs pitchai போட்டார்கள்

      Delete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot