TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 11 January 2019

TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல்.

இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன..!" - கல்வி அமைச்சர் வாக்குறுதியை  அதிகாரிகள் விரைவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் - TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல்.


கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைபடுத்த வெளிவந்த அரசாணைகள் மற்றும் செயல்முறைகளை அமலாக்கம் செய்வதில், அந்த சமயத்தில் நிகழ்ந்த பணி நியமனங்களுக்கு தாமதமாக TNTET நிபந்தனை கொடுத்ததும் தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி.

23/08/2010 (RTE) முதல் 16/11/2012 ( ஆசிரியர் பணிக்கு TNTET கட்டாயம் என்ற கல்வி இயக்குனர் செயல்முறைகள் ) தேதி வரையிலான காலகட்டத்தில் TNTET பற்றிய நிபந்தனை தெரியாத சூழலில் பணியில் சேர்ந்த சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள் TNTET நிபந்தனைக்குக் கீழே முறையாக 16/11/2012 கொண்டு வரப்பட்டனர்.

இதில் அரசு, மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 9000 பேர் விலக்கு பெற்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 1000 பேர் இன்னும் இந்த சிக்கலிலிருந்து விடுபடவில்லை.

இவர்களில் ஒருசில ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டு இருந்தனர்.

ஒருசிலர்
மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரிடமும் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு அவர் தற்போதைய அம்மாவின் அரசு உங்களுக்கு எதிர்மறையான முடிவுகள் எதுவும் எடுக்காது எனவும் விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும்  உறுதிபடக் கூறியிருந்தார்.

கடந்த 07/09/2018 ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உள்ள அரசாணை, தரவுகள், செயல்முறைகள் அடிப்படையில் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டாதவாறு முடிவு எடுத்து 4 மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.  இதனால் வழக்கு முடிவுக்கு வந்தது.

நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்
அதன் மீது தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது புலப்படாத சூழலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்ளன.

இந்த TNTET நிபந்தனை ஆசிரியர்கள் காலக்கெடு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது என கடந்த வாரங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி மேலும் காயமடையச் செய்துள்ளது. இந்த பிரச்சினை சம்மந்தமாக மற்ற ஆசிரியர் சங்கங்களும் விரைவில் தீர்வு காண தமிழகஅரசை  வலியுறுத்தி தீர்மானங்கள்   மொழிந்தன.



ஆகவே தமிழக அரசு கடைசி நேரம் வரை இந்த சிக்கலைக் கொண்டு செல்லாமல் 23/08/2010 முதல் 16/11/2012 வரை பணியில் சேர்ந்த TNTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அல்லது சிறுபான்மையினர் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு கொடுத்த புத்தாக்கப் பயிற்சி கொடுத்து இந்த  சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பு தயாராக உள்ளது அதே போல அரசாணை வெளிவிடும் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பும் கருணை உள்ளத்தோடு  விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot