இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள்- வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர்கழகம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 10 January 2018

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள்- வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர்கழகம்

பிளஸ் 1 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்கொள்ளப் போகும் நிலையில், பாடப்பகுதி வாரியாக இடம்பெறும் வினாக்கள் குறித்த புளுபிரின்ட் இல்லாமல் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து மேல்நிலைக் கல்வியில் தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் மொத்தம் 1,200 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.கடந்த ஆண்டு வரை மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2-வில் மட்டுமே பொதுத்தேர்வு இருந்ததால் தேர்வில் 1,200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண். செய்முறைத்தேர்வு இல்லாத பாடங்களுக்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் ஆண்டுக்கு 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். அக மதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண்.

அக மதிப்பீடு

அக மதிப்பீட்டில் வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பின் இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதைப் போன்று பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.பிளஸ் 1 பொதுத்தேர்வாக மாற்றப்பட்டதுடன் வினா அமைப்பு, வினாத் தாள் முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறை, அக மதிப்பீடு, வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு புளு பிரிண்ட் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன.புளு பிரின்ட் முறைபுளு பிரின்ட் முறை என்பது பொதுத்தேர்வில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த கேள்விகள் இடம்பெறும் என்ற விவரங்களை உள்ளடக்கியது. இதன்மூலம் குறிப்பிட்ட சில பகுதிகளை மாணவர்கள் படிக்காமல் விட்டுவிட முடியும். ஒவ்வொரு பகுதிக்கும் மதிப்பெண் முன்னுரிமை எவ்வளவு என்பது தெரிவதால் அந்தப் பகுதிகளை மட்டுமே மாணவர்கள் படித்தால் அதிக மதிப்பெண் பெற்று விட முடியும்.

வினாத்தாள் அமைப்பு முறை

அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதமே அனுப்பப்பட்டுவிட்டது. அதேநேரம், தேர்வு நெருங்கி வரும் நிலையில் புளு பிரின்ட் இல்லாமல் தேர்வை எப்படி அணுகுவது என தெரியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வைப் போன்று பெற்றோர் ஆசிரியர் கழகம் பிளஸ் 1 வகுப்புக்கு சொல்யூஷன் புத்தகம், வினா-வங்கி, மாதிரி வினாக்கள் கையேடு ஏதும் வெளியிடவில்லை. இதன் காரணமாகவும், புளு பிரிண்ட் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறாததாலும், பல்வேறு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாலும் பிளஸ் 1 மாணவர்கள் பொதுத்தேர்வைச் சந்திப் பதில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.புளு பிரின்ட் முறை இல்லாதால் அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் அனைத்துப் பகுதிகளையும் படித்தாக வேண்டும். எஸ்எஸ்எல்சி தேர்வைப் போல குறிப்பிட்ட பகுதிகளை அப்படியே படிக்காமல் விட்டுவிட முடியாது. இது அவர்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.மேலும், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் சொல்யூஷன் புத்தகம், முக்கிய கேள்விகள் அடங்கிய வினா-வங்கி, மாதிரி வினாக்கள் ஆகியவையும் மாணவர்களுக்கு மிகவும் கைகொடுத்து வருகின்றன.

இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “எஸ்எஸ்எல்சி தேர்வில்புளு பிரின்ட் அடிப்படையில்தான் வினாக்கள் கேட்கப்படும். எந்தெந்த பகுதிகளில் இருந்துஎன்னென்ன கேள்விகள் இடம்பெறும் என்பது மாணவர் களுக்கு நன்கு தெரியும். ஆனால், தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வில் புளு பிரின்ட் வினாமுறை இல்லை. எனவே, பாடங்களில் எந்த பகுதியில் இருந்தும் எந்த கேள்வியும் இடம்பெறலாம். இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வை நினைத்து கவலை அடையலாம்.மாணவர்கள் அச்சம்மேலும், புதிய வினாத்தாள் முறை, புதிய மதிப்பீட்டு முறை, அக மதிப்பீடு என பல்வேறு புதிய முறைகள் கொண்டு வரப்பட்டிருப்பதும் அவர்களின் அச்சத்துக்குக் காரணமாக இருக்கலாம். முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வினா-வங்கியை பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்டால் மாணவர்களுக்கு அது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.

வினா - வங்கி சாத்தியமில்லை

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறும்போது, “இந்த ஆண்டில் இருந்துதான் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இனிமேல் வினா வங்கி தயாரித்து வழங்குவது இயலாத காரியம். கண்டிப்பாக அடுத்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 வகுப்புக்கும் வினா வங்கி தயாரித்து வெளியிடப்படும்” என்றனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூறும்போது, ‘முதல்முறையாக பொதுத்தேர்வு என்பதால் மதிப்பீட்டிலும் சற்று தாராளம் காட்ட வேண்டும். பொதுத்தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களையும் தயார்படுத்த வேண்டும்’ என்றனர்.

குழப்பத்துக்கு காரணம் என்ன?

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் வினாத்தாள் தொடர்பான புளு பிரின்ட் உண்டா? இல்லையா? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளுக்கு புளு பிரின்ட் முறை இருப்பதால் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கும் புளு பிரின்ட் இருக்கும் என்று இன்னும் ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, புளு பிரின்ட் விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி தெளிவுபடுத்திவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கிடையே, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

மாணவர்கள் பாதிக்காத வகையில் வினாத்தாள்தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கே.மணிவாசகன்:

பள்ளிக் கல்வியில் மாற்றம் கொண்டுவரும் வகையில் தமிழக அரசு 39 ஆண்டுகளுக்குப் பிறகு தைரியமாக ஒரு புதிய முன்முயற்சியை எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் இருந்து இத்தனை கேள்விகள் இத்தனைமதிப்பெண்ணுக்கு வரும் என்று முன்பு போல மீண்டும் அமைந்தால் அது நன்றாக இருக்காது. இதில் பல சிரமங்கள் இருக்கலாம். ஆனால், மாணவர்கள் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.இப்போது அனைத்து பாடங்களையும் அவர்கள் படிக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதுடன் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காத வகையில் வினாத்தாள் அமைந்திருக்கும் என்ற உத்தரவாதத்தையும் அரசு அளித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot