கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி, உப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறங்குடி நம்பி கோவில் செல்லும் வழியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாகை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதிக காற்று வீசும் என்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும், கனமழையினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.